காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிய குரும்பனூர் தரைப்பாலம்: மக்கள் அவதி

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள குரும்பனூர் கிராமத்தில் தேக்கம்பட்டி மற்றும் சிக்கதாசம்பாளையம் கிராமங்களை இணைக்கும் சாலையில் மழைநீர் வடிகால் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில் அமைந்துள்ள இப்பாலத்தின் வழியே தினசரி ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்த பாலம் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பே சேதமடைய தொடங்கி விட்டது.

தரைப்பாலத்தின் மேல் பகுதி முழுவதும் சிதிலமடைந்து காணப் படுகிறது. மழைக்காலங்களில் மழை நீர் சாலையில் பெருக் கெடுத்து ஓடி மண் அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. இது தொடர்பாக பலமுறை அரசு துறைகளிடம் மனுக்கள் அளித்தும், சேதமடைந்தபாலம் சீரமைப்பு செய்யப்படவில்லை. பாலத்தை விரைந்து சீரமைக்க வலியுறுத்தும் விதமாக, கடந்த மாத இறுதியில் இப்பகுதி மக்கள் நூதன முறையில் தரைப்பாலத்துக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று பெய்த கனமழையின் காரணமாக, பாலத்தின் மீது காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இவ்வழியே போக்குவரத்து தடைபட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்