சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று நிவாரண உதவிகள் வழங்கினர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருமங்கலம் பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாமக தலைவர் அன்புமணி தரமணி பகுதியிலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா கோடம்பாக்கம் பகுதியிலும் நிவாரண உதவிகளை வழங்கினர். விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் பல்வேறு பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
ஐஏஎஸ், ஐபிஎஸ்.கள் உதவி: தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்க தலைவர் ஆபாஷ்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம், தங்களது உறுப்பினர்களின் ஒருநாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பிலும் புயல் நிவாரண நிதிக்காக தங்களின் ஒருநாள் ஊதியத்தை தமிழக அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago