சென்னை: புயல் நிவாரணப் பணிகள் தொடர்வதால் இன்று சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கும், திருவள்ளூரில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிச.4-ம் தேதி கடந்து சென்ற மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் தொடர்ந்து மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்வதாலும்,பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாலும், சென்னை மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் விடுமுறை அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago