திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பால் கெட்டு போவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்ததை அடுத்து, ஆவின் நிறுவனத்துக்கு பால் பாக்கெட்டுகளை முகவர்கள் திருப்பி அனுப்பினர். காரைக்குடியில் உள்ள ஆவின்நிறுவனம் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பால் பாக்கெட்டுகள் அனுப்பப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆவின் முகவர்கள் மூலம் தினமும் 1,000 லிட்டர் வரை பால் பாக்கெட்டுகள் விற் பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக ஆவின் பால் உடனடியாக கெட்டுப் போவதாக வாடிக்கையாளர்கள் முகவர்களிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அதி காலை திருப்பத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளின் நிறமும் மாறுபாடாக இருந்தது. ஏற்கெனவே வாடிக்கை யாளர்கள் புகார் தெரிவித்த நிலையில், நிறமும் மாறுபாடாக இருந்ததால் 1,000 லிட்டர் பால் பாக்கெட்டுகளையும் அப் படியே காரைக்குடி ஆவின் நிறுவனத்துக்கு முகவர்கள் திருப்பி அனுப்பினர். இதனால் திருப்பத்தூரில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிலர் தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கிச் சென் றனர்.
இதுகுறித்து காரைக்குடி ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது ‘‘பால் கெட்டுப் போகவில்லை. கொழுப்பு திரண்டு இருந்தை தவறாக நினைத்துக் கொண்டு திருப்பி அனுப்பினர். மேலும் வேறு பால் பாக்கெட்டுகளை தேவையான அளவு வாங்கிக் கொள்ள முகவர்களிடம் தெரிவித்துள்ளோம். சில சமயங்களில் முகவர்கள் பால் பாக்கெட்டுகளை உடனடியாக குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்காமல் வெளியே வைப்பதாலும் வேகமாக கெட்டுப்போக வாய்ப்புள்ளது. இதுகுறித்து முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்’’ என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago