சென்னை: மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி(36). இவர் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அடுத்த சில நாட்களுக்கு அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடமும், தனது சகோதரர் அழகிரி குடும்பத்தினரிடமும் அவர் கேட்டறிந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago