பெட்ரோல் பங்க்-களில் உள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

By ச.கார்த்திகேயன்

மத்திய அரசு ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் தூய்மை நகரங்கள் பட்டியலில் முன்னிலை பெறும் விதமாக சென்னை மாநகரப் பகுதியில் இயங்கும் அனைத்து பெட்ரோல் பங்க்.களிலும் உள்ள கழிப்பறைகளைப் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில் கடந்த 2014-ல் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த இரு ஆண்டுகளாக தூய்மை நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, தூய்மை நகரங்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு பங்கேற்ற மொத்தம் உள்ள 434 நகரங்களில் சென்னை மாநகரத்துக்கு 235-வது இடம் கிடைத்தது. இந்த ஆண்டும் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தூய்மை நகர கணக்கெடுப்பு பணி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுப்பில், தூய்மை தொடர்பாக நகர உள்ளாட்சி அமைப்பு கள் அளிக்கும் ஆவணங்களுக்கு 1400 மதிப்பெண்கள், மத்திய அரசு மேற்கொள்ளும் நேரடி கள ஆய்வுக்கு 1200 மதிப்பெண்கள், நகரத்தில் உள்ள தூய்மை தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு 1400 மதிப்பெண்கள் என மொத்தம் 4 ஆயிரம் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தூய்மை நகரங்களின் தரவரிசைப் பட்டி யல் வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பில் சென்னை மாநகரம் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்.களில் உள்ள கழிவறைகளை இலவசமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே இந்தியன் ஆயில் நிறுவனம் அனைத்து பெட்ரோல் பங்க்.களி லும் கழிவறைகளை அமைத்து, வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதைப் பொதுமக்களும் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் தோராயமாக 400 பெட்ரோல் பங்க்.கள் உள்ளன. இந்த உத்தரவு குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பொதுமக்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அடுத்த மாதம் தொடங்க இருக்கிறோம். அதற்காக பெட்ரோல் பங்க்.களில் உள்ள கழிவறைகளில் ஒட்டுவதற்கான ஸ்டிக்கர்களும் தயாராக உள்ளன. இந்த உத்தரவு சென்னையில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு பயனுள்ள தாக இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்