ராமேசுவரம்: இலங்கை கடல் படையினரால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மிக்ஜாம் புயல் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை. இந்நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு நேற்று ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
மண்டபத்திலிருந்து கடலுக்குச் சென்ற உயிர்தராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் இருந்த மீனவர்கள் நேற்று மாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, உயிர்தராஜின் விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த மீனவர்கள் ஜெயஸ்தன்(36), தால்ஷா (50), சார்லஸ் (54), லாசர் கெபிஸ்டன் (30), தினேஷ் (38),முனியசாமி (58), அருள் பிரிட்சன் (28), ஜான் சைமன் (31)ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள் இன்று (டிச. 7)இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago