தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் தெற்கு ஆந்திரா பகுதியில் கரையைக் கடந்தது. புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடந்த 3 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

புயல் கரையைக் கடந்ததால், கடல் பகுதியில் காற்றின் வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. தூத்துக்குடி கடல் பகுதியில் இயல்பான வானிலை நிலவியது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லலாம் என்று, மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்கள் நேற்று அதிகாலை முதல் மீன்பிடிக்க சென்றனர். தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலையில் 184 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதனால் அதிகளவில் மீன்கள் வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE