புதுச்சேரி - சென்னை இடையே 2-வது நாளாக பேருந்துகள் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை யால் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக மூடப்பட் டிருந்த புதுச்சேரி கடற்கரைச் சாலை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அதே நேரத்தில் புதுச்சேரி - சென்னை இடையே 2-வது நாளாக நேற்றும் பேருந்துகள், ரயில்கள் நிறுத்தப்பட்டன.

புயல் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக புதுச்சேரி கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற் காக, அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. நேற்று காலை கடற்கரை பகுதியில் நடைப் பயிற்சி செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. வானிலை சீரானதும் காலை 9 மணிக்குப் பிறகு கடற்கரைச் சாலைக்கு செல்ல முடியாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் எடுக்கப்பட்டு, மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் புயலின் பாதிப்பு அதிக மாக உள்ளதால், இரண்டாவது நாளாக நேற்றும் புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பைபாஸ் சாலை வழியாக சென்னை நோக்கிச் செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. சென்னை - புதுவை இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து நான்கைந்து நாட்களாக கருமேகங்கள் சூழ்ந்து வந்த புதுச்சேரி பகுதியின் வானிலை நேற்று வெகுவாக மாறியது. சுட்டெரிக்கும் வெயிலில் துணியை உலர வைக்கின்றனர். இடம்: குருசுக்குப்பம் கடற்கரை. படம்: எம்.சாம்ராஜ்

நேற்று பிற்பகலில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் தமிழக அரசு பேருந்துகள் மட்டும் சொற்ப எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. மிக்ஜாம் புயலால் மழைப் பொழிவு எதுவும் இல்லாவிட்டாலும் புதுச்சேரி நகர் முழுவதும் நேற்று முன்தினம் வானம் மேக மூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது.

நேற்று அந்தச் சூழல் முற்றிலும் மாறி வெயில் அடித்தது. பல இடங்களில் மழை பெய்த சுவடே இல்லாத அளவுக்கு மாறியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்