விழுப்புரம்: மழைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என மரக்காணம் உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்காணம் பகுதியில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் உப்பளங்களில் வேலை செய்து வருகின்றனர். மழைக் காலத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இந்தத் தொழில் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே உப்பள தொழிலாளர்களின் நலன் கருதி மழைக் காலத்தில் ஆண்டு தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என கடந்தாண்டு தமிழக அரசு அறிவித்தது. இதன்படி கடந்தாண்டு இப்பகுதியில் உள்ள 1,322 தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இந் தாண்டு 388 தொழிலாளர்களுக்கு மட்டுமே நிவாரண நிதி கிடைத்துள்ளது. அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கக்கோரி மரக்காணம் இசிஆர் பேருந்து நிலையம் அருகில் நேற்று ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட உப்பளத் தொழிலாளர்கள் முடிவெடுத்தனர். இதனை அறிந்த மரக்காணம் வட்டாட்சியர் பால முருகன் மற்றும் போலீஸார் உப்பளத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உப்பளத் தொழிலா ளர்கள், "அனைத்து தொழிலாளர்களும் நல வாரியத்தில் பதிவு செய்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். வாரியத்தில் பதிவு செய்வதை எளிமைப்படுத்த வேண்டும். மழைக் கால நிவாரண நிதியை காலம் கடத்தாமல் டிசம்பர் மாதத்திலேயே வழங்க வேண்டும்"என வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார். இதை தொடர்ந்து உப்பளத் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago