குற்றாலநாதர் கோயிலில் செப்பு பட்டயங்கள் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

தென்காசி: குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் சுவாமி கோயிலில் பழமையான 5 செப்புப் பட்டயங்கள் கண்டெடுக் கப்பட்டன.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையின் சுவடி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தாமரைப்பாண்டியன் கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில் களில் அரிய பழஞ்சுவடிகளையும், செப்புப் பட்டயங்களையும் திரட்டி நூலாக்கம் செய்ய சுவடி திட்ட பணிக்குழு ஒன்றை அமைச்சர் சேகர்பாபு அமைத்தார்.

இக்குழுவினர் தென்காசி மாவட்டம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் இருந்த 5 புதிய செப்புப் பட்டயங்களை கண்டறிந்தனர். அந்தச் செப்புப் பட்டயங்களை படி எடுத்து ஆய்வு செய்தேன். அவற்றில் 2 செப்பு பட்டயங்கள் அழகன்பெருமாள் பாண்டியன் மற்றும் சீவலவரகுணராம பாண்டியன் ஆகியோரின் பெயரில் குற்றா லநாதர் சுவாமிக்கு சாயரட்சை கட்டளை வழங்கியது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு செப்பு பட்டயம் அசாது வாலாசாய்பு, இசுமாலி ராவுத்தர் போன்ற பலர் குற்றாலநாதர் சுவாமிக்கு நித்திய விழா பூஜை கட்டளைக்கு தானம் வழங்கியது குறித்து கூறுகிறது.

மற்ற செப்பேடுகளில் திருப் பதிக பாடல்கள், திருஅங்க மாலை பதிகம்,  காசிமடம் திருப்பனந்தாள் என்ற குறிப்பு, திருவெம்பாவை பாடல்கள், குமர குருபர சுவாமிகள் எழுதிய பாடல் காணப்படுகின்றன.

குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு 1848-ம் ஆண்டு நித்திய விழா பூஜை மற்றும் திருநெல் வேலி காந்திமதியம்மன் சிறுகால பூஜைக்கான கட்டளைக்கு இஸ்லாமியர்களான அசாது வாலசாயுபும், இசுமாலி ராவுத் தரும், வேறு சிலரும் சேர்ந்து தானப்பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

அதில் புடவைசாற்று மற் றும் இறங்குசான்று கச்சை ஒன்றுக்கு மாகாணி பணமும், சின் ஒன்றுக்கு அரை மாகாண வீதமும் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் 10 மாதங்களுக்கு தொடர்ச்சியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது, என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகன்பெருமாள் பராக்கிரம பாண்டியனின் காலம் கி.பி.1473- 1506 வரை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். சீவலவரகுணராமபாண்டியன் கி.பி.1613-1618 கால கட்டத்தில் ஆட்சி செய்ததாக கல்வெட்டுகள் வழியாக அறிய முடிகிறது. இவ்வாறு தாமரைப் பாண்டியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE