திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இடிக்கப்பட்ட அறையில் இருந்தது என்ன?- பட்டியல் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக பணிக் காக இடிக்கப்பட்ட அறையில் இருந்த பொருட்களின் பட்டியலை தாக்கல் செய்ய, அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், திரு வட்டாறைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றக் கிளையில் தாக் கல் செய்த மனு:

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 8-ம் நூற் றாண்டில் கட்டப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்தக் கோயிலில் கும்பாபிஷேக விழா வுக்காக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது சில அறைகள் இடிக்கப்பட்டதில் அங்கிருந்த விலை மதிப்புமிக்க நகைகள் மற்றும் பொருட்கள் மாயமாகின.

எனவே, திருவட்டாறு கோயில் நகைகள் மற்றும் பொருட்களை முறையாகப் பராமரிக்கவும், கோயிலில் மாயமான ஆபரணங் களை கண்டுபிடிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, நகைகள் இருந்ததாகக் கூறப்படும் அறை எப்போது இடிக்கப்பட்டது? அந்த அறையை இடிக்க அனுமதி வழங்கியது யார்? அந்த அறை யில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்ன? அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா? கோயில் ஆபரணங்கள் தொடர்பான ஆவணங்களை யார் பராமரிப்பது? இது குறித்து விரிவான பதில் மனுவை இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும். டிச.6-ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படு கிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE