நாளை பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம்: பழநி கோயிலுக்கு துப்பாக்கி போலீஸார் பாதுகாப்பு

By செய்திப்பிரிவு

பழநி/ராமேசுவரம்: பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதியை முன்னிட்டு பழநி முருகன் கோயில் தங்கக் கோபுர பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6-ம் தேதியை முன்னிட்டு முக்கிய வழிபாட்டுத்தலங் கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து, ரயில்வே நிலையங்களில் போலீஸ் பாது காப்பை பலப்படுத்துவது வழக் கம். அதன்படி, நாளை டிச.6-ம் தேதியை முன்னிட்டு பழநி தண்டாயு தபாணி சுவாமி மலைக் கோயிலில் உள்ள தங்கக் கோபுரத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், நேற்று பழநி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் ரயில் நிலைய வளாகம், அலுவலகம், தண் டவாளப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், ரயில் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிரமாகச் சோதனையிட்டனர். பழநி பேருந்து நிலை யம், மலை அடிவாரப் பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை நேற்று சோதனையிட்ட ரயில்வே போலீஸார்.

ராமேசுவரத்தில்.. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் ராமநாமநாத சுவாமி கோயில், பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை போலீஸார் சோதனை யிட்டனர். அதுபோல மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, ரயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள் ளது. பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE