சென்னை: மிக்ஜாம் புயலால் வெள்ளக்காடாக காட்சியளித்த திருவல்லிக்கேணி பகுதிகளில், கொட்டு மழையில் நனைந்தவாறு அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். புயலையொட்டி பெய்து வரும்கனமழையால், சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. குறிப்பாக திருவல்லிக்கேணி - சேப்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் கடல் போல் தேங்கியிருந்தது. தனியார் விடுதிகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் நெருக்கமாக காணப்படும் திருவல்லிக்கேணியில், பெய்த மழையால் விடுதிகள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, தரை தளங்களையும், பார்க்கிங் தளங்களையும் முழுவதுமாக நிரப்பின.
இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வரமுடியாத சூழல் நிலவியது. மேலும் விடுதிகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தண்ணீரில் மிதந்து தத்தளித்தன. இடுப்பளவுக்கு மழைநீர் நிற்பதால் நடந்து கூட செல்லமுடியாத அளவுக்கு வாலாஜா சாலை, எல்லீஸ் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சேப்பாக்கம் பெல்ஸ் சாலை, ஐஸ்-அவுஸ், பாரதிசாலை ஆகியவற்றின் நிலை இருந்தது. இதற்கிடையே கொட்டும் மழையில் நனைந்தவாறு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பெரிய பள்ளி வாசல், பி.வி.ராமன் சாலை, ஐஸ்-அவுஸ், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, அவ்வை சண்முகம் சாலை, ஜானி ஜான்கான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிற்றுண்டிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் புயல்-மழை குறித்தும், மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு மையத்திலும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆயிவின்போது மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago