சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நிதியுதவி வழங்கியுள்ளனர்.
மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
» மிக்ஜாம் புயல் | வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுச்சுவர் சேதம்
» “ஓர் எல்லை வரை தான் கட்டுப்படுத்த முடியும்” - மிக்ஜாம் புயல் குறித்து கமல்ஹாசன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago