மிக்ஜாம் புயல் | வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுச்சுவர் சேதம்

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், வண்டலூர் பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 30 மரங்கள் விழுந்துள்ளன. பூங்காவில் அமைந்துள்ள ஓட்டேரி ஏரி நிரம்பி வழிகிறது. நான்குக்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றுச்சுவர்கள் சேதமடைந்த காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பூங்காவில் இருக்கும் பணியாளர்களை கொண்டு விலங்குகளுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் விரைந்து வடியும் வகையில் வடிகால் வசதிகளில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE