சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில், “அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என பூந்தமல்லி பெரிய மசூதி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பள்ளிவாசலின் ஃபேஸ்புக் பக்கத்தில், “அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று மிக்ஜாம் புயலால் மழை அதிகமாக பெய்து வருவதால் பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் பள்ளியில் தண்ணீர் பிடிக்கலாம், மொபைல் மற்றும் ஜார்ஜ் லைட் போன்ற சாதனங்களுக்கு ஜார்ஜ் செய்து கொள்ளலாம். மழை அதிகமாக இருப்பதால் வீட்டிற்குள் மழைநீர் வந்தவர்கள் பள்ளியில் தங்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “அஸ்ஸலாமு அலைக்கும் மழைநீர் அதிகமாக இருப்பதால் பொது மக்கள் பள்ளியை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு கொடுக்கப்படுகிறது. பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல. நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு ஏற்பாடு நடைபெறுகிறது. (150 கிலோ அரிசி கொண்டு உண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது) பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டும் அல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆபத்து நேரத்திலும் பயன்படுத்தப்படும். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
» “எல்லா இடங்களிலும் தண்ணீர்; கேவலமான விஷயம்” - நடிகர் விஷால் காட்டம்
» மிக்ஜாம் புயல் | மீட்பு பணிக்காக பிற மாவட்டங்களில் இருந்து சென்னை விரையும் தூய்மை பணியாளர்கள்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago