மிக்ஜாம் புயல் முன்னறிவிப்பு: கட்டிட பணிகளை நிறுத்த சிஎம்டிஏ உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சிஎம்டிஏ வெளியிட்ட எச்சரிக்கை செய்திக் குறிப்பு: மிக்ஜாம் புயல் முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பை தடுக்க, ஒவ்வொரு பல அடுக்குமாடித் தளங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதன்படி, துளையிடும் ‘பைல் ரிக்’குகள் தரையில் நங்கூரமிடப்பட்டு இருக்க வேண்டும். கிரேன் பூம் ஏற்றம் குறைக்கப்பட வேண்டும். டவர் கிரேன் பூம் சுழற்சியை தவிர்க்க பூட்டி வைக்கப்பட வேண்டும். உயரமான கூரைகளில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும். பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும். அல்லது காற்றின் பாதையில் எதிர்ப்பாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து தற்காலிகமான கட்டுமான அமைப்புகளும், சாதனங்களும் சரி செய்யப்பட வேண்டும்.

அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.கட்டுமானத் தளங்களில் வெல்டிங் செய்வதை தவிர்க்க வேண்டும். பொதுவாக அனைத்து வேலைகளும் தளத்தில் நிறுத்த வேண்டும். அவசர காலத்தில் தொழிலாளிகள் தங்கள் தலையில் கடினமான ஹெல்மெட் அணிந்து மட்டுமே கட்டுமானப் பகுதியில் செல்ல வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE