காவிரி முதல் கங்கை வரையான பாரம்பரிய தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும்: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஆளுநர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: காசி தமிழ் சங்கமம் வாயிலாக காவிரி முதல் கங்கை வரையான பாரம்பரிய தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் திட்டத்தின்கீழ் பண்டைய இந்தியாவில் கலாச்சார மையங்களாக திகழ்ந்த தமிழகத்துக்கும், உத்தரப் பிரதேசத்தின் வாராணசிக்கும் இடையே உள்ள உறவை புதுப்பிக்கும் நோக்கத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஏற்பாடு செய்தது. இதற்கு பரவலாக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து 2-ம் கட்டமாக காசி தமிழ் சங்கமம்-2.0 நிகழ்வு வரும் டிசம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த பயணம் குறித்த நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆளுநர்ஆர்.என்.ரவி பேசியதாவது: மார்கழி மாத திருவிழாக்களில் ஒன்றாக காசி சங்கமம் இணைந்துள்ளது. பண்டிகை காலங்களில் இந்தியா என்பது ஒரே பாரதமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. நம்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். அந்த வளர்ச்சியும் நிலையானதாக இருக்க வேண்டும்.

அதைசெய்ய இந்தியாவின் கலாச்சாரத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை புரிந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காசிக்கும், தமிழகத்துக்கும் ஆயிரம் ஆண்டுகால பாரம்பரிய தொடர்புள்ளது. இவை எல்லாம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு பிறகு மறைந்துவிட்டது. எனவே, கங்கை முதல் காவிரி வரை ஏற்கெனவே இருந்த தொடர்புகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். காசி தமிழ் சங்கமம் என்பது ஒரு தேசிய பண்டிகைபோல உருவாக வேண்டும். காசியில் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில், ‘‘காசி தமிழ் சங்கமம் முதல் நிகழ்ச்சியில் 12 ரயில்களில் மக்களை அழைத்து சென்று தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து காண்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முன்பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் 25,000 பேர் பதிவு செய்தனர். அதிலிருந்து 2,500 பேரை அழைத்துச் சென்றோம். இந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி முதல் காசிக்கு அழைத்து செல்ல உள்ளோம். இந்த பயணம் 8 நாட்கள் அமைய உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், எழுத்தாளர்கள், பக்தியாளர்கள் என தனித்தனியாக குழு அமைக்கப்பட்டு அவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிகளவிலான மக்கள் முன்பதிவு செய்வார்கள்’’என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்