சென்னை: அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: எங்கே தவறு நடந்தாலும், அது தவறுதான். யார் குற்றம் செய்தாலும், அது குற்றம்தான். அதில் சட்டம் தன் கடமையை செய்வதில் எந்த தவறும் இல்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: ஊழலை ஒழிக்கவந்த புனிதர்கள்போல வேடம் தரித்து வந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம்பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத் துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
» டிச.4-ல் அதி கனமழை அலர்ட் - 118 ரயில்கள் ரத்து முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரை | புயல் அப்டேட்
» “இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி” - விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா தகவல்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மத்திய பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத் துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அமலாக்கத் துறையின் அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழகம் முழுவதும் உள்ளஅமலாக்கத் துறை அலுவலகங்களிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: நாடுமுழுவதும் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் பறிப்பது, எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை மறுப்பது, பொது வாழ்வில் உள்ளவர்கள் மீது வழக்குகள் போட்டு, அவர்களது செயல்பாடுகளை முடக்குவது என அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வரும் மத்திய பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சுயேச்சையாக செயல்பட்டுக் கொண்டிருந்த மத்திய விசாரணை முகமைகள் அனைத்தும் பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசியல் ஏவலுக்கான துறையாக மாறிப்போய்விட்டன. அதற்காகவே வானளாவிய அதிகாரங்கள் அந்த முகமைகளிடம் குவிக்கப்பட்டன. இப்போது, மோடி ஆட்சியின் ஊழல்,முறைகேடுகளும் மத்திய முகமைகளில் ஊடுருவி மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago