சென்னை: கேரளாவுக்கு செல்லும் 20-க்கும்மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகும்மிக்ஜாம் புயல் காரணமாக, டிச.3,4 மற்றும் 5-ம் தேதிகளில் 144ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆந்திரா உட்பட வெளிமாநிலங்களில் இருந்துகேரளாவுக்கு இயக்கப்படும், நாரசாபூர்- கோட்டயம், மறுமார்க்கமாக கோட்டயம்- நாரசாபூர்,செகந்திராபாத்- கொல்லம், கொல்லம்-செகந்திராபாத், பாட்னா-எர்ணாகுளம், பிலாஸ்பூர்- எர்ணாகுளம் உட்பட 20-க்கும் மேற்பட்டரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த ரயில்கள் பெரும்பாலும் கோட்டயம், எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும் இயக்கப்படும் ரயில்களாகும். ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களைசேர்ந்தவர்களும் வடமாநிலங்களில் இருந்து வருபவர்களும் சபரிமலை செல்ல பெரும்பாலும் ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். இந்நிலையில், புயல் காரணமாக கேரளா செல்லும் 20-க்கும்மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் அயப்பாக்கம் கிளை தலைவர் சபரி கூறியதாவது:
பேரிடர் காலம் என்பதால் பயணிகளின் நலன் கருதி ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகம், ஆந்திராவில்தான் பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். கேரளாவில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, நிலைமை சீராகும் வரை பக்தர்கள்காத்திருந்து, சபரிமலைக்கு செல்லலாம். மேலும் தமிழக அரசு சபரிமலைக்கு அதிக பேருந்துகளைஇயக்குவதால், இந்த நாட்களில் கட்டாயம் சபரிமலைக்கு சென்றேஆக வேண்டும் என நினைப்பவர்கள், பேருந்து மற்றும் சொந்த வாகனங்களில் சென்று வரலாம். அனைத்து பகுதிகளிலும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுபவர்கள் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago