புதுக்கோட்டை: கடந்த அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். அப்போது, வருமானத்தைவிட 54 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
2021-ம் ஆண்டில் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனைநடத்தி, ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளிப் பொருட்கள், 136 கனரக வாகனப் பதிவு ஆவணங்கள், 19 ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர்.
இந்த வழக்கில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில், லஞ்சஒழிப்புப் போலீஸார் அண்மையில் தாக்கல் செய்தனர். விஜயபாஸ்கர், அவரது மனைவி ஆகியோருக்கு இதற்கான நகல்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், சொத்துகள் குறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தாக்கல் செய்த ஆவணங்களின் நகலைக் கேட்டு விஜயபாஸ்கரும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதனடிப்படையில் இருவருக்குமான 17,000 பக்கங்கள் கொண்ட சொத்து ஆவண நகல்களை, லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைத்தனர். அவற்றை விஜயபாஸ்கர் மற்றும் ரம்யா தரப்பு வழக்கறிஞர்கள் பெற்றுக் கொண்டனர்.
» டிச.4-ல் அதி கனமழை அலர்ட் - 118 ரயில்கள் ரத்து முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரை | புயல் அப்டேட்
» “இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தி” - விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா தகவல்
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 20-ம்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிபூரண ஜெயஆனந்த் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago