கோவை: அதிமுக கூட்டணியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சேர வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் கோவையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இரு நாட்கள் நடைபெற்ற இக்கூட்டம் நேற்று நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு40 ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமான வரி விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. நாட்டில்வேலையிழப்பும், பணவீக்கமும்அதிகரித்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் இந்தப் பிரச்சினை எதிரொலிக்கும்.
நாடு முழுவதும் பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியின மக்கள் தாக்கப்படுகின்றனர். வெறுப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாநில அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.
ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்தாலும், ஜி-20 நாடுகளில் இந்தியா கடைசி இடத்தில்தான் உள்ளது. யுனெஸ்கோவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.
மக்கள் நலனுக்காக பாஜக வீழ்த்தப்பட வேண்டியது அவசியம். ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்தவுடன், மக்களவைத் தேர்தல் தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும். இண்டியா கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும். வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் உள்ளது. அதிமுககூட்டணிக்குச் செல்ல வாய்ப்பேஇல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ப மார்க்சிய கம்யூனிஸ்ட் கூட்டணியை முடிவு செய்துள்ளது. அது இண்டியா கூட்டணியின் வெற்றியைப் பாதிக்காது.
கேரள ஆளுநர் 8 மசோதாக்களை 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கிறார். ஆளுநர்களை வைத்து மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும்.
அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற புலனாய்வு ஏஜென்சிகளை வைத்து மத்திய அரசு, மாநில அரசுகளை மிரட்டுகிறது. அமலாக்கத் துறை பதிவு செய்யும் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago