சென்னையில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்ற இரவு, பகலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்: பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில்வல்லுநர்களின் பரிந்துரை யின்பேரில் மேலும் 800 கிமீநீளத்துக்கு மேல் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டாலும், கடந்த 29-ம் தேதிகொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான இடங்களில் மழைநீர்தேங்கியது. வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர்புகுந்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியதால் அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டனர். மாநகராட்சி சார்பில், தேங்கிய வெள்ள நீரை வடிக்கும் பணியில் சுழற்சி முறையில் 23 ஆயிரம்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 29-ம் தேதி இரவு முதல், இரவு பகல்பாராது, கொட்டும் மழைக்கு நடுவேதொடர்ந்து வெள்ளநீரை வடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை குடிநீர்வாரிய பணியாளர்கள் 2 ஆயிரம்பேரும், வாரியத்தின் 542 இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுடன், மாநகராட்சிக்கு உதவி வருகின்றனர். இவர்களின் அயராத பணிகள் காரணமாக மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து இயல்புநிலை திரும்பி வருகிறது. இதற்கிடையே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் டிச.1-ம் தேதியிட்ட இதழில்,சென்னை கே.கே.நகர்இஎஸ்ஐ மருத்துவமனை அருகில், மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலை, எழும்பூர் அரசு அருங்காட்சியகம், தி.நகர் பனகல்பூங்கா, அசோக்நகர் உதயம்திரையரங்கம் அருகில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம்அருகே, கோடம்பாக்கம் சுப்பிரமணிய நகர், மேற்கு மாம்பலம் சீனிவாசா சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர்தேங்கி இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகிஇருந்தது.

அதனடிப்படை யில் மாநகராட்சி மேற் கொண்ட நடவடிக்கை கார ணமாக அப்பகுதிகளில் நேற்று வெள்ளநீர் வடிந்தது. வெள்ளநீர் தேங்கியதால் பாதிக்கப்பட்ட மேற்கு மாம்பலம் பகுதியில் மாநகராட்சிசார்பில் மழைக்கால மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. அதை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது மாநகர நல அலுவலர் எம்.ஜெக தீசன் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்