வேலூரில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: விவசாயிகள் வேதனை

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் காட்பாடி அருகே அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. பயிர் சேதத் தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாழ்வான பகுதிகள், குளம், குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. தொடர் மழை காரண மாக மலைப்பகுதிகளில் நீரூற்று ஏற்பட்டு, நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

காட்பாடி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. காட்பாடி அடுத்த மேல்பாடி அருகிலுள்ள தேன்பள்ளி ஊராட்சி, வெங்கடாபுரம் கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விளை நிலங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி உள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்து அழுகிய நிலையில் காணப்படுவதால், நெற்பயிர்கள் அறுவடை செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, ‘‘காட்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்று விவ சாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், பருவமழை தீவிர மடைந்துள்ளதால் விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது. மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை முறையாக கணக்கிட்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE