கோலியனூர் - வடலூர் இடையேயான பணி எப்போது முழுமை பெறும்? - வாகன ஓட்டிகள் கடும் அவதி

By ந.முருகவேல் 


விருத்தாசலம்: கடலூர்- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் சட்ட விரோத சுங்கக் கட்டணம் வசூல் கடலூர் - விருத்தாசலம் இடையே ரூ.250 கோடி மதிப்பீட்டில் 50 கி.மீ தொலைவுக்கு நான்கு வழிச்சாலை பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் குறிஞ்சிப்பாடி ரயிலடி பகுதியிலும், விருத்தாசலம் புறவழிச் சாலையிலும் மேம்பாலப் பணிகளும், அரச குழியில் சாலை விரிவாக்கமும், நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணிகளும் நடந்து வருகின்றன.

மேலும் குறிஞ்சிப்பாடி - வடலூர் - நெய்வேலி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படாமலும், சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. பல்வேறு குறைபாடுகள் உள்ள இந்தச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடலூர் - விருத்தாசலம் சாலை விரிவாக்கம் தொடர்பாக கடலூர் கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற் பொறியாளர் சக்திவேலுவிடம் பேசியபோது, “சாலைகளை நாங்கள் அமைத்து வருகிறோம். நகாய் நிர்வாகம் தான் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது. அவர்களிடம் தான் அதுகுறித்து கேட்க வேண்டும்” என்றார். ‘விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையேயான 162 கி.மீ தேசிய நெடுஞ்சாலை ( விகேடி சாலை ) தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் 4 வழிச் சாலையாக மாற்றப்படும்’ என்று கடந்த 2006-ம் ஆண்டு, அப்போது மத்திய தரை வழி போக்கு வரத்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு அறிவிப்பு வெளியிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE