செங்கை/திருவள்ளூர்/காஞ்சி: சென்னை புறநகர் மற்றும் செங்கை,திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தாம்பரம் மாநகராட்சியில் 1-வது மண்டலம் பம்மல் அண்ணா நகரில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்க்கட்டளை பெரியதெரு, பாலாஜிநகர், காந்தி தெரு,பிருந்தாவன் நகர் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, மண்டலக்குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை,அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் 137 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. மேலும் 194 ஏரிகள் 75சதவீதத்துக்கு மேலும், 132 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும்,52 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும், 13 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நிரம்பி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி பகுதியில், ஆவடி காவல் நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.கவரப்பேட்டை அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள ஏ. என். குப்பம் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 56 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும், 36 ஏரிகள் 75 சதவீதமும், 61 ஏரிகள் 50 சதவீதமும், 171 ஏரிகள் 25 சதவீதமும், 57 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.
நேற்று மதியம் நிலவரப்படி, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,169 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 22.19 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 1,716 கன அடியாகவும் இருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 4,079 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு, 3,074 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 20.31 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 600 கன அடியாகவும் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago