சென்னை: இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. தமிழக அரசின் ஆதரவுடன்நடக்கும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த ஆண்டுக்கான, 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிச.14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பின் பொதுச் செயலாளரும், திரைப்பட விழா இயக்குநருமான தங்கராஜ் கூறியதாவது:
21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 57 நாடுகளை சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தொடக்க நிகழ்ச்சியின்போது, விம் வெண்டர்ஸ் (Wim Wenders) இயக்கிய ஜப்பானிய படமான ‘பெர்ஃபெக்ட் டேஸ்’ (PERFECT DAYS) திரையிடப்பட உள்ளது. நிறைவு நாளில், இத்தாலியன் - பிரெஞ்சு படமான ‘எ பிரைட்டர் டுமாரோ’ (A BRIGHTER TOMORROW) படம் திரையிடப்படும். இந்த விழாவில் 8 ஈரானியப் படங்கள், 5 கொரியப் படங்கள், பிரெஞ்சு, ஹங்கேரி, மெக்ஸிகோ நாடுகளில் இருந்து தலா 3 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், ராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், உடன்பால், விடுதலை பாகம் 1, வி3 ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.
» அமீர் vs ஞானவேல்ராஜா | “படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள்” - அமீருக்கு ஆதரவாக சேரன் ட்வீட்
» ஈரோட்டில் பேருந்துகள் மோதி விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் காயம்
சென்னை பிவிஆர் ஐநாக்ஸ் சினிமாஸ் (சத்யம்), சாந்தம், சீசன், சிக்ஸ் டிகிரி, சேரின் ஸ்க்ரீன்ஸ், அண்ணா சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குநர்கள் மோகன் ராஜா, யூகி சேது, பிலிம்சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago