சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓபிஎஸ் தரப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், வரும் டிச.11 வரை ஏற்கெனவே பிறப்பித்ததடையை ஓபிஎஸ் தரப்பும் மீறக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த நவ. 7-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என ஓபிஎஸ் தரப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை தள்ளிவைத்திருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில் பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
» மருந்தகம், மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள், நோயாளிகள் அவதி
» செங்கை, திருவள்ளூர், காஞ்சி மாவட்ட சாலை, குடியிருப்புகளில் மழைநீர் தேக்கம்
அப்போது நீதிபதி, இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன், அந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும்வரை இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்றார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த இபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு வரட்டும். அதுவரை இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாமே என்றார். மேலும், ஒருவேளை இந்த வழக்கை தள்ளி வைப்பதாக இருந்தால் ஏற்கெனவே ஓபிஎஸ் தரப்புக்கு விதிக்கப்பட்ட இடைக் காலத் தடையை நீட்டிக்க வேண்டும் என்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.எச். அரவிந்தபாண்டியன், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஓபிஎஸ் தற்போதும் பின்பற்றி வருகிறார். அவர் அந்த உத்தரவை மீறப்போவதில்லை. எனவே தடையை நீட்டிக்கக்கூடாது என்றார்.
உத்தரவை மீறக்கூடாது: இதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டிக்க மறுப்பு தெரிவித்து, வழக்கை வரும் டிச.11-க்கு தள்ளிவைத்துள்ளார். ஆனால் அதுவரை ஓபிஎஸ் தரப்பும் ஏற்கெனவே பிறப்பித்துள்ள தடை உத்தரவை மீறக்கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago