நாமக்கல்: தொடர் மழையால் நாமக்கல் மாவட்டத்தில் 13 ஏரிகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த இரு வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பரவலாக உள்ள ஏரி உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்களின் நீர்மட்டமும் கணிசமான அளவு உயர்ந்து வருகிறது.
இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் 79 ஏரிகள் உள்ளன. இவற்றில் 13 ஏரிகள் தொடர் மழை காரணமாக அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதேபோல் 2 ஏரிகளில் 90 சதவீதமும், 3 ஏரிகளில் 80 சதவீதமும், ஒரு ஏரியில் 70 சதவீதமும், 9 ஏரிகளில் 50 சதவீதமும் மற்றும் 20 ஏரிகளில் 25 சதவீதமும் நீர் நிரம்பியுள்ளது, என்றனர்.
தொடர்மழை காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்தாலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 31 ஏரிகளில் நீர் நிரம்பாமல் வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது என்பதால், ஒரு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago