திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியல் சமூகத்தினர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: எல்.முருகன், அண்ணாமலை புகார்

By செய்திப்பிரிவு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் நாங்குநேரி சம்பவங்களின் பின்னணியிலும் குற்றத்தில் ஈடுபட்ட சிலருக்கு ஆதரவாகவும் உள்ளூர் திமுக நிர்வாகிகள் சிலர் இருப்பதாக தமிழக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறது.

தற்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதி பெருங்குடியில் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் உட்பட 5 பேர் மீது ஒரு கும்பல் ஆயுதத்தால் வெட்டி கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருவது கண்கூடு. வாக்கு அரசியலுக்காக, குற்றவாளிகளுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்காமல், தொடர்ந்து சமூகங்களுக்கிடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது திமுக அரசு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE