புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த அதிமுக சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பதவி வகித்த வீரபாண்டி ஆறுமுகம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கை சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரித்தது. அந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி வீரபாண்டி ஆறுமுகத்தை விடுவித்து கடந்த 2008 நவ.6 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல தற்போதைய அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2007 மார்ச் 22 அன்று உத்தரவிட்டது.
இதில் வீரபாண்டி ஆறுமுகம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும், அமைச்சர் துரைமுருகன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் மூன்றாவது நபர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது எனக்கூறி தள்ளுபடி செய்தது.
» மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி
» “விஜயகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும்” - இயக்குநர் அமீர்
இதேபோல அமைச்சர் கே.என்.நேரு கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.61 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். மேலும் 1996-2001 காலகட்டத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த தற்போதைய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எஸ்.ரகுபதி ஆகியோரும் வழக்கில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். இதேபோல முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி, மதுரை முன்னாள் மேயர் குழந்தைவேலு ஆகியோரும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து ஆறுமுகம், கோவிந்தன் மற்றும் அதிமுக சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் குமணன் ஆஜராகி வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தீர ஆய்வு செய்தபிறகே குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில் காலதாமதமாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 1,324 நாட்கள் முதல் 1,859 நாட்கள் வரை காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டு வழக்குகள் ஏற்புடையதல்ல எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago