சிறுமிக்கு கை விலங்கிட்டு அழைத்து வந்த சம்பவம்: கோத்தகிரியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு

By செய்திப்பிரிவு

கோத்தகிரி: கோத்தகிரியில் சிறுமிக்கு கை விலங்கிட்டு போலீஸார் அழைத்து வந்தது தொடர்பாக விரிவான அறிக்கையை ஆணையத்துக்கு அனுப்பி வைக்க கோரியுள்ளதாக, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்க் கனுங்கோ தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனுங்கோ தலைமையில், குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் குறித்த சிறப்பு அமர்வு விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது.

இந்த முகாமில் 202 மனுக்கள் பெறப்பட்டன. கோத்தகிரியில் கை விலங்கிட்டு போலீஸார் அழைத்து வந்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக, தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு, கருவி அறக்கட்டளை இயக்கம் ஆகியவை இணைந்து 250 கையெழுத்து பெற்று ஆணைய தலைவரிடம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய தலைவர் கூறும்போது, "கோத்தகிரியில் கடந்த 7-ம் தேதி 15 வயது சிறுமிக்கு காவல்துறை கைவிலங்கிட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த சம்பவம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தெரிய வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரில் பேசி, விரிவான அறிக்கையை ஆணையத்துக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளேன். பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை நடத்தினேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE