திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் இப்பகுதியிலுள்ள காக்காச்சி மற்றும் ஊத்து பகுதிகளில் தலா 32 மி.மீ., நாலுமுக்கில் 37 மி.மீ., மாஞ்சோலையில் 15 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
மாவட்டத்திலுள்ள அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாப நாசம் - 14, சேர்வலாறு - 5, மணி முத்தாறு - 9.2, நம்பியாறு - 7, கொடு முடியாறு - 9, அம்பா சமுத்திரம் - 10, சேரன்மகா தேவி - 11.6, நாங்குநேரி - 1, களக்காடு - 2.2, மூலைக்கரைப் பட்டி - 10, பாளையங்கோட்டை- 2, திருநெல்வேலி - 1. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 108 அடியை எட்டியிருந்தது.
அணைக்கு விநாடிக்கு 854 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 504 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.35 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 411 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 35 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago