மதுரையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: ஒரே நாளில் ரூ.2,03,500 அபராதம் 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: சாலைகளில் மாடுகளை சுற்றித் திரிய விட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சம் அபராம் மாநகராட்சி விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை மாநகராட்சி சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மாநகராட்சியால் அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுத்தும் வரப்படுகிறது. அப்படியிருந்தும் சாலகளில் மாடுகள் சுற்றித் திரிவதை தடுக்க முடியவில்லை.

இன்று சாலையில் சுற்றி திரிந்த மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் 20 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.43,500 அபராதமும், மண்டலம் 2-க்கு உட்பட்ட பகுதிகளில் 13 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.18000 அபராதமும், மண்டலம் 3க்கு உட்பட்ட பகுதிகளில் 27 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.61,500 அபராதமும், மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளில் 54 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.64,500 அபராதமும், மண்டலம் 5க்கு உட்பட்ட பகுதிகளில் 16 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.16,000 அபராதமும் என மொத்தம் 130 மாடுகள் பிடிக்கப்பட்டு மொத்தம் ரூ.2,03,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் கூறுகையில், ''மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களது பாதுகாப்பில் தங்களுக்குரிய இடத்தில் மாடுகளை தொழுவத்தில் கட்டி பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் வளர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும் மற்றும் போக்கு வரத்திற்கும் இடையூறாக சாலைகளில் கால்நடைகளை திரியவிடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்