7-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: ஜெயலலிதா நினைவிடத்தில் டிச.5-ல் பழனிசாமி அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக மக்கள் அனைவரின் இதயங்களில் நிரந்தரமாக இருக்கும் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி மறைந்தார்.

அவரின் 7-ம் ஆண்டு நினைவு நாளான வரும் டிச.5-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இதில் கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள பொறுப்பாளர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் ஜெயலலிதா உருவப்படத்தை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். இத்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டும்.

அதேபோல, கட்சி செயல்பட்டு வரும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் டிச.5-ம் தேதி ஆங்காங்கே ஜெயலலிதா படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்