சென்னை: தமிழகத்தில் நேற்று வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்துக்கு 15.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்.27-ம் தேதி தொடங்கியது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அன்று முதலே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்கள் பெறப்பட்டன.
அந்த வகையில், கடந்த நவ 3-ம் தேதி நிலவரப்படி, நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் 36,142 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், பொதுமக்கள் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த நவ 4,5-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதில் 4 லட்சத்து 7,100 பெயர் சேர்ப்பதற்காக அளித்த படிவம் உட்பட 6 லட்சத்து 112 பேர் விண்ணப்பித்தனர்.
» மேலும் 11 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிப்பு: போர் நிறுத்தம் நீட்டிப்பால் காசா மக்கள் நிம்மதி
இதையடுத்து, நவ.18, 19 ஆகிய இரு தினங்களும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நவ.18-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் மற்றும் பள்ளி வேலை நாள் அறிவிக்கப்பட்டிருந்ததால், நவ. 25, 26-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் நவ. 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
முன்னதாக கடந்த நவ.24-ம் தேதி வரை பெயர் சேர்க்க 6.13 லட்சம் பேர் உட்பட 10.45 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நவ.26-ம் தேதி இரவு நிலவரப்படி, பெயர் சேர்க்க 9.13 லட்சம் பேர், பெயர் நீக்கத்துக்கு 1.21 லட்சம் உட்பட 15.33 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago