சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஸ்மார்ட் சிட்டி சிறப்பு திட்டத்தின்படி, ஒப்பந்த அடிப்படையில் வாகன நிறுத்தம் தொடர்பான சேவைகளை தனியார் நிறுவனம் மூலம் சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது. அந்த நிறுவனங்களுக்கு வாகன நிறுத்தத்துக்கான கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தத்துக்கான இடங்களை கண்டறிந்து, தனியார் சேவை நிறுவனம் மூலம் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில், அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்த கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20, இரு-சக்கர வாகனங்களுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. மேலும், பாண்டி பஜார் சாலையில், வாகனம் நிறுத்தத்துக்கு சிறப்புக் கட்டணமாக ஒரு மணி நேரத்துக்கு 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.60, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.15 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, அனுமதிக்கப்பட்ட வாகன நிறுத்த கட்டணவரம்பைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதுபற்றி மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணிலும், @chennaicorp என்ற எக்ஸ் வலைதள பக்கத்திலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும்,அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago