சென்னையில் நிர்வாக காரணங்களுக்காக 13 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக, சென்னை- செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயில்களின் நேரம் நாளை (நவ.27) முதல் மாற்றம் செய்யப்பட உள்ளன.

கும்மிடிப்பூண்டி - தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,கடற்கரை ரயில் நிலையத்தில் மாலை 4.50 மணிக்கு பதிலாக, 10 நிமிடம் முன்பாக மாலை 4.40 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மாலை 4.40 மணிக்கு பதிலாக, மாலை 4.50 மணிக்கு புறப்படும்.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இரவு 8.45 மணிக்கு பதிலாக, இரவு 8.35 மணிக்கு இயக்கப்படும். சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இரவு 8.35 மணிக்கு பதிலாக, இரவு 8.45 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக, அதிகாலை 4.55 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு- சென்னை கடற்கரைக்கு மாலை 5.45 மணிக்கு பதிலாக, மாலை 6 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மாலை 6.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, மாலை 6.15 மணிக்கு புறப்படும்.

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு மாலை 6.10 மணிக்கு பதிலாக, மாலை 6.15 மணிக்கு புறப்படும். இது தவிர, 4 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த நேரம் மாற்றம் நாளை (நவ.27) முதல் நடைமுறைக்கு வருகிறது.

ரயில் சேவையில் மாற்றம்: சென்னை கடற்கரை - திருமால்பூருக்கு நவ.28, 29 ஆகிய தேதிகளில் காலை 7.27 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு நவ.28, 29 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.05 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருமால்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்