காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட போராட்டக் குழுவினர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பெண்கள் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5,476 ஏக்கர் பரப்பில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
13 கிராம மக்கள் போராட்டம்: இதனால், குடியிருப்புகள், விளை நிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என்று கூறி, பரந்தூரை சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் 486 நாட்களை கடந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு, பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர்நிலத்தை கையகப்படுத்ததமிழக தொழில் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த அக்டோபர் இறுதியில் வெளியிடப்பட்டது. ஆனால், வெளியில் தெரிவிக்கப்படாமல் இருந்தது.
» பரந்தூர் விமான நிலையத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு அனுமதி: வேல்முருகன் அதிர்ச்சி
நிலம் எடுப்புக்கு அலுவலர்கள்: இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு, ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடும், நிர்வாக செலவுடன் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், நிலம் எடுப்புக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட 326 பேர் நியமிக்கப்பட் டுள்ளனர்.
இந்த சூழலில், பரந்தூர் நில எடுப்பு பணியை தொடங்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இதுகுறித்து விவரம் கேட்பதற்காக, பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்த போராட்டக் குழு செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் 12 பேர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசனை சந்தித்து பேசிய அவர்கள், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் ஆணை குறித்து விளக்கம் கேட்டதுடன், அரசாணை நகலை தருமாறும் கேட்டுள்ளனர்.
அவர் அளித்த பதில் திருப்தி இல்லாததால் அங்கிருந்து வெளி யேறிய அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு வந்து, அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்தனர்.
12 பேரும் விடுவிப்பு: இத்தகவல் பரவியதும், பரந்தூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கருப்புக் கொடி ஏந்தி பரந்தூரில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. சுதாகர் உத்தரவின்பேரில், கைது செய்யப்பட்ட 12 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து விமான நிலையபணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும்கிராம மக்கள் கூறியபோது, ‘‘குடியிருப்புகளை பாதுகாப்போம், உங்களை கைவிடாமல் காப்பாற்று கிறோம் கவலைப்படாதீர்கள் என்றெல்லாம் வாக்குறுதி அளித்த அரசு நிர்வாகம், தற்போது நிலம்எடுக்க நிர்வாக அனுமதி வழங்கியிருப்பது ஏமாற்றம் தருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினரிடம் பேசி, அடுத்தகட்ட போராட்டத்துக்கு தயாராவோம்’’ என்றனர்.
கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்: பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான், தவாகதலைவர் தி.வேல்முருகன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago