கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு மெமு ரயில் (06033)இன்று (25-ம் தேதி) மாலை 6 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06034) திருவண்ணாமலையில் இருந்து நாளை (26-ம் தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 8.05 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.

தாம்பரத்திலிருந்து.. இதேபோல, தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு (26, 27-ம் தேதிகளில் மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (06129) தாம்பரத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.35 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கத்தில், சிறப்பு ரயில் (06130) நாளையும், நாளை மறுதினமும் மதியம் 1.45 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE