திட்டக்குடியில் ரூ.33 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை: அரசாணை வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.33 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கடனுதவியுடன் நிறுவுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.33 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கடனுதவியுடன் நிறுவுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு 24.11.2023 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஒன்றியங்கள் மற்றும் பிற ஒன்றியங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு உகந்த தரமான கால்நடைத் தீவனம் வழங்குவதும், மாவட்ட ஒன்றியங்களுக்கு தடையின்றி சமச்சீர் கால்நடை தீவனம் வழங்கப்படுவதை உறுதி செய்வதும், தரமான கால்நடை தீவனம் வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் ஆற்றல் திறன், பசுமை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கார்பன் மாசைக் குறைக்க செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE