சிறை பிடிக்கப்பட்ட 15 மீனவர்கள் தாயகம் திரும்பினர்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 60 மீனவர்கள், மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 64 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், 63 மீனவர்கள் மட்டும் ஊர்காவல் துறை, மன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர். எனினும், ராமேசுவரத்தைச் சேர்ந்தமீனவர் நம்புமுருகன் 2 முறைஎல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட 63 மீனவர்களில் முதல்கட்டமாக 15 பேர் இரு தினங்களுக்கு முன் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்.

இந்நிலையில், 2-வது கட்டமாக மேலும் 15 மீனவர்கள் நேற்று காலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சென்னை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் மீன்வளத் துறையினர் மூலம் தனி வாகனத்தில் ராமேசுவரத்துக்கு நேற்று இரவு அழைத்து வரப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE