காஷ்மீரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: ஜெயலலிதா உத்தரவு

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

'ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்