தமிழ் இணைய கல்வி கழகத்தின் கணித்தமிழ் மாநாட்டில் ‘ஹேக்கத்தான்’ போட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில் கணித்தமிழ் பன்னாட்டு மாநாட்டின் ஒருபகுதியாக நிரலாக்க (ஹேக்கத்தான்) போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்விக்கழக இயக்குநர் சே.ரா.காந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த ‘தமிழிணையம் 99’ மாநாட்டுக்குப் பின் 25 ஆண்டுகள் கழித்து தமிழக அரசு ஒருங்கிணைக்கும் ‘பன்னாட்டு கணித்தமிழ் 24’ மாநாடு, அடுத்தாண்டு பிப்ரவரி 8, 9, 10-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு இணையவழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகிய முக்கியமான பணிகளைச் செய்துவரும் தமிழ் இணைய கல்விக்கழகம் இந்த மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய கல்விக்கழகம், ஸ்டார்ட்அப் டிஎன் நிறுவனத்துடன் இணைந்து நிரலாக்கப் போட்டியை (ஹேக்கத்தான்) நடத்துகிறது. இப்போட்டியின் வாயிலாக நவீனத் தொழில்நுட்பங்களான இயற்கை மொழி ஆய்வு, இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இதர டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியின் வளமையை வெளிக்கொணரவும், புதுமைகளைச் சிந்திக்கத் தூண்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் எழுத்துணரி (தமிழ் ஓசிஆர்), தமிழ் பேச்சைப் புரிந்து கொள்ளுதல், தமிழ் உள்ளடக்க உருவாக்கம், தமிழ் உரையாடி, தமிழில் இயற்கை மொழி ஆய்வு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நிரலாக்கப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், ஆர்வலர்களும், மொழி தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் நிறுவனங்களும் கலந்துகொள்ளலாம். மேலும், நிரலாக்கப் போட்டியிலிருந்து உருவாகியிருக்கும் கருவிகள், மென்பொருள்கள், தளங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவை ஆய்வாளர்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்காக www.tamilvu.org இணையதளத்தில் பதிவேற்றப்படும். நிரலாக்கப் போட்டி குறித்த விரிவான விவரங்கள் https://www.kanitamil.in/#/hackathon என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்