சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களாக தொடர்ந்து மழைபெய்து வருவதால் சென்னை விமான நிலையத்துக்கு பயணிகள், விமானிகள் வருவதிலும், உடைமைகளை விமானங்களில் ஏற்றுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை.
உள்நாட்டு முனையத்தில் நேற்று அதிகாலையில் இருந்து திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர் உள்ளிட்ட 10 உள்நாட்டு விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
அதேபோல், சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, குவைத், பிராங்பார்ட், பக்ரைன், துபாய், சார்ஜா, தோகா, அடிஷ் அபாபா, அபுதாபி, மஸ்கட்,லண்டன் ஆகிய 12 விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
மேலும் அதிகாலை 5.45மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 9.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் தொடர் கனமழை, பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
» கனமழை | 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
» சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 65 நோயாளிகள் பாதுகாப்பாக மீட்பு
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago