ஓசூர்: கர்நாடக மாநில அணைகளுக்குச் சென்று தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கும் போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் (நாராயணசாமி நாயுடு) சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து, ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே சங்கத்தின்மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று மண்பானைகளுடன் ஊர்வலமாக கர்நாடக மாநிலஎல்லையைநோக்கிப் புறப்பட்டனர்.
அப்போது, கர்நாடகா மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி, மண் பானைகளை தரையில் போட்டு உடைத்தனர். அதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியிலிருந்த டிஎஸ்பி பாபு பிரசாத்தலைமையிலான போலீஸார், விவசாயிகளைத் தடுத்து நிறுத்தி, 15 பெண்கள் உள்ளிட்ட 145 விவ சாயிகளைக் கைது செய்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுசாமி கூறியதாவது: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டத்தில் 16 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவைமற்றும் தாளடி சம்பா பருவத்துக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசிடம் உரிய நேரத்தில் தண்ணீர் பெற்றுத் தராமல்தமிழக அரசு துரோகம் செய்து விட்டது. மத்திய அரசும் மவுனமாக இருந்து வருகிறது.
கர்நாடகா அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு தண்ணீர் பெற்றுத் தரவில்லை என்றால்,மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago