தேர்வில் பழைய கேள்வித்தாள் விவகாரம் | திருவள்ளுவர் பல்கலை.யில் 3 பேர் குழு விசாரணை

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. பல்கலை.யின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வரு கின்றன.

இந்தாண்டு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான பருவத் தேர்வு நடந்து வரும் நிலையில், முதுநிலை கணிதவியல் பாடத் தேர்வில் கடந்த 2021-ம் ஆண்டின் கேள்வித்தாள் மீண்டும் இந்தாண்டு அப்படியே வெளியாகி சர்ச்சையைஏற்படுத்திய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதுநிலை கணிதவியல் பாடத்தேர்வில் கடந்த ஏப்ரல் மாதம் கேட்கப்பட்ட கேள்வித்தாள் மீண்டும் கேட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

பழைய கேள்வித்தாள் வெளியாகியது தொடர்பாக 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பழைய கேள்வித்தாள் மீண்டும் வழங்கிய தனியார் கல்லூரியின் பேராசிரியரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர் மன்னிப்புகோரி மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அவர் மீது 3 பேர் கொண்டகுழு அளிக்கும் அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.எந்தவிதமான கல்விப் பணிகளி லும் அவரை வரும் காலங்களில் ஈடுபடுத்த மாட்டோம்.

நிலுவையில் உள்ள தேர்வு களுக்கான கேள்வித்தாள்களில் பழைய கேள்வித்தாள் மீண்டும் வருமா? என தெரியவில்லை. கைவசம் இருக்கும் கேள்வித்தாள்களை பிரித்து சரிபார்த்துபிரச்சினைகளை வரவழைப்பதை விட அதை பிரிக்காமல் அப்படியே விட்டுவிடலாம். அடுத்த பருவத்தேர்வுகளில் பழைய கேள்வித்தாள் வெளியாகாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக் கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்