கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

By செய்திப்பிரிவு

சென்னை: கீதா பவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 31 பேருக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவச திருமணங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் 31 ஜோடிகளுக்கான இலவச திருமணம் சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில்உள்ள கீதா பவன் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

இந்த திருமண விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிடி.பரத சக்கரவர்த்தி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். கீதா பவன் அறக்கட்டளைத் தலைவர் ஓம் பிரகாஷ் மோடி, நிர்வாக அறங்காவலர் மனு கோயல், பொருளாளர் முராரிலால் சந்தோலியா மற்றும் அறங்காவலர்கள், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பா.சிம்மசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தம்பதிகளுக்கு 4 கிராம் தங்கதாலி, ஆடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், மளிகை பொருட்கள்மற்றும் 145 வகையிலான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கீதா பவன் நிர்வாக அறங்காவலர் மனு கோயல் பேசுகையில், ‘நடப்பாண்டு திருமணத்துக்கு தமிழகத்தில் 11 இடங்களில் கீதா பவன் அறக்கட்டளை சார்பில் சுயம்வரம் நடந்தது. இதில், தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் ஒரு மாவட்டத்தில் இருந்தும் 1,617 ஆண்கள், 161 பெண்கள் பங்கேற்றனர். அதில் 31 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது அவர்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பேசும்போது, ‘இங்கிருக்கும் மணமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் மணம் செய்து கொண்டாலும் கூட, ஒவ்வொருவரும், ஒவ்வொரு இடத்தில் பூத்த பூக்கள். ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு மனம், வித்தியாசமான வண்ணம் இருக்கும். அதேபோல், வெவ்வேறு குடும்ப சூழ்நிலையில் இருந்து வந்த நீங்கள்,எல்லாவற்றிற்கும் அவர்கள் நமக்காக மாறி விட வேண்டும் என எண்ணாமல், அவர்கள் அவர்களாகவே இருக்க ஒப்புக்கொண்டு மன ஒற்றுமையோடு வாழ வேண்டும். கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் ஒருவருக்கு ஒருவர் நல்ல அறிவுரை கூறும் சிறந்த தோழனாய், தோழியாய் வாழ வேண்டும்,’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்