உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ஏன்?- எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில், ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை நிறை வேற்றுவது தொடர்பாக அரசினர் தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி பேசியபோது நடைபெற்ற விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: ஆளுநர் குறிப்பிட்ட‘வித் ஹோல்டு’ என்பதை நிறுத்திவைப்பதாக தெரிவிக்கப்படும் போது ரத்தாகவோ, நிராகரிக்கப்பட்டதாகவோ தெரிவிக்கப்பட வில்லை. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவே இதன் பொருள் கொள்ளப்படும் என கருதுகிறேன்.

சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி: அது நிலுவையில் இருப்பதாக அர்த்தமல்ல. திருப்பி அனுப்பப் பட்டு விட்டது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: ‘வித் ஹோல்டு’ அல்லது‘வித் ஹெல்டு’ என்பது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தமாகிறது. நீட் மசோதாவிலும் இதேபோன்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டபோது, அதன் மீது முடிவெடுக் கப்படவில்லை என்றனர். ஆனால்,நீதிமன்றத்தில் அது தெளிவு படுத்தப்பட்டது.

பேரவைத்தலைவர் அப்பாவு: சட்டப்பேரவை எனக்கு அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்திபேரவைத் தலைவர் என்ற முறையில் நான் மறுஆய்வுக்கு அனுமதியளித்துள்ளேன். ஆளுநர் உள்நோக்கத்துடன் திருப்பியனுப்பிய தாக கொள்ளப்பட வேண்டும்.

பழனிசாமி: ஏற்கெனவே சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவர் காலதாமதம் செய்ததால் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு இருப்பதால், வழக்கில் பிரச்சினை ஏற்படுமா?

துரைமுருகன்: மாதக்கணக்கில் நிலுவையில் வைத்திருந்ததை அவர் அனுப்பிவிட்டார். வழக்கு வரும்போது, நான் திருப்பியனுப்பிவிட்டேன் என்பார். நாளை இந்தவழக்கு வரும்போது, இந்த மசோதாக்கள் ஆளுநர்மாளிகையில் இருக்கும். அவர் கையெழுத்துபோட்டுவிட்டுதான் டெல்லி செல்ல வேண்டும்.

பழனிசாமி: நிலுவையில் இருக்கும் அனைத்தையும் குறிப்பிட்டுதான், வழக்கு தொடர்ந் துள்ளீர்கள். எனவே தீர்ப்பு வரும்வரை பொறுக்கலாம் இல்லையா?

அமைச்சர் பொன்முடி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிவுநமக்கு சாதகமாக வரவேண்டும் என்பதற்காகவே, சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பழனிசாமி: ஒட்டுமொத்தமாக நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து வழக்கு தொடரப்பட்டதா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நிச்சயமாக உறுதியாக, மாநில சுயாட்சி கொள்கையுடன், இதைதொடருவோம். எந்த சந்தேக மும் வேண்டாம்.

பழனிசாமி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தீர்ப்பு சாதகமாக வந்தால் சிறப்பு கூட்டம் தேவையில்லையே?

முதல்வர் ஸ்டாலின்: மீதமுள்ளசட்ட முன்வடிவுகள் குறித்து வழக்குவிசாரணையில் எடுத்துக்கூறி, ஆளுநர் விரை வாக நடவடிக்கை எடுக்க அரசு ஆவண செய்யும்.

பழனிசாமி: முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, 29 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இதேமசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த அன்பழகன், சட்டத்தை பின்வாங்குவதாக அறிவித்தார்.

துரைமுருகன்: அப்போது துணைவேந்தர் நியமனத்துக்கு குழு அமைக்கப்படும். முதல்வருடன் பேசி யாரை பரிந்துரைக்கிறாரோ அவரை ஆளுநர் நியமிப்பார். ஆனால், இப்போது சிண்டிகேட், செனட் இரண்டும் சேர்ந்து தீர்மானம்போட்டாலும், ஆளுநர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தரமாட்டேன் என்பது சர்வாதிகாரமாகும்.

பழனிசாமி: அவை முன்னவர் சாதுர்யமாக கூறுகிறார்.

முதல்வர் ஸ்டாலின்: அவைமுன்னவர் சாதுர்யமாக இல்லை. உண்மையை கூறி உள்ளார்.

பழனிசாமி: வேந்தர் குறித்து சட்ட முன்வடிவை அதிமுக அரசுகொண்டுவந்தபோது அப்போதுஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு கைவிட்டதாக கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்: அப்போதெல்லாம் துணைவேந்தர் நியமனத்தில் அரசின் பரிசீலனை கேட்கப்படும். ஆனால் தற்போது அப்படியில்லை.

பழனிசாமி: அப்போதும் கிடையாது. துணைவேந்தர் நியமன அதிகாரம் வேந்தருக்குஇருந்ததால் தான்.வேந்தர்குறித்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால்,திமுக ஆதரிக்கவில்லை.அப்போதில் இருந்துஇப்போதுவரை ஒரே சட்டமாக உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டநெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், இதுகுறித்து தெரிவித்துள்ளார். எனவே, திமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து, மீன்வள பல்கலை.க்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைக்கப்பட்ட நிலையில், அதை மாற்றும் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ள தாக பழனிசாமி தெரிவித்தார்.

ஆனால், அதற்குஅரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஜெயலலிதா பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதிமுக - பாஜக தொடர்பு: அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன், ‘‘இவர்கள் வெளிநடப்பு செய்திருப்பதை பார்க்கும்போது, பாஜக - அதிமுக இடையிலான தொடர்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாக தெரிகிறது. ஆளுநர் மற்றும்பாஜகவை எதிர்க்க முடியாமல், மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதாபெயர் வைப்பதற்கான மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இல் லாத ஒருகாரணத்தை கூறி தற்போது வெளிநடப்பு செய்துள்ளனர்’’என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE